பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் - கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும் அதனை தடுக்கும் வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சிசுல் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்குள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும், கொழும்பில் உள்ள பாடசாலைகளில் இருந்து அதனை தடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை உயர்த்தும் வேலைத்திட்டம் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'குரு பிரதிபா பிரபா' நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
