மன்னாரில் பதற்றம்: நள்ளிரவில் வீதிக்கிறங்கிய பொதுமக்கள்
Sri Lankan Tamils
Mannar
Tamil
By Shalini Balachandran
மன்னாரில் (Mannar) காற்றாலை விவகாரத்தினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் வண்ணார் நகரை நோக்கி நேற்று (26) இரவு கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சூழல்
இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கழகம் அடக்கம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



