யாழில் ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு! கொந்தளிக்கும் நாமல்

SLPP Namal Rajapaksa Sri Lankan Peoples Tilvin silva NPP Government
By Dhilak May 25, 2026 10:05 AM GMT
Report

தேர்தல்களை நடத்துவது குறித்த முடிவுகளைப் நாடாளுமன்றமும் தேர்தல் ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டுமே தவிர, ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை எவ்வாறு அறிவிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

பானந்துரையில் நேற்று (24) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வெளியிட்டிருந்த கருத்துக்களை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை! உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை! உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

சட்டபூர்வ அதிகாரம்

நாடாளுமன்றமும் தேர்தல் ஆணையாளருமே தேர்தல் குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றும், நாடு முழுவதும் சுற்றித்திரியும் ஒரு கட்சிச் செயலாளரால் தேர்தலைத் தீர்மானிக்க முடியாது என்றும் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டில் தேர்தல் நடக்குமா இல்லையா என்று அறிவிக்க அத்தகைய செயலாளர்களுக்கு எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை எனவும், அனைத்து முடிவுகளும் அரசியலமைப்பு நிறுவனங்கள் மூலமாகவே எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு! கொந்தளிக்கும் நாமல் | Provincial Council Elections Namal S Allegations

தற்போதைய சூழலில் வரவிருக்கும் தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லாத போதிலும், பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் தொடர்ந்து கலந்துகொள்வது தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியையும், தங்கள் கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டு அடிமட்ட அளவில் கட்சி இன்னும் பலமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிர்வாகத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகத் தங்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொய்யான வாக்குறுதிகள்

அத்துடன், இளைஞர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகக் குற்றம் சாட்டிய அவர், அந்நியச் செலாவணி வரவு, வாகனச் சலுகைகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குதல் போன்ற வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழில் ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு! கொந்தளிக்கும் நாமல் | Provincial Council Elections Namal S Allegations

மேலும், நாட்டின் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என விமர்சித்த நாமல் ராஜபக்ச, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைவது குறித்து அரசாங்கத்தின் அமைச்சர்களே பரஸ்பர முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச வீசா

இன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச வீசா

வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு

வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026