சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடுங்கள் - சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட அரிய வாய்ப்பு
தெஹிவளை மிருககாட்சிச் சாலையில் பிறந்த இரண்டு புதிய சிங்கக் குட்டிகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெயர் பரிந்துரைக்கும் நிகழ்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண் மற்றும் பெண் சிங்கக் குட்டிகள் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி பிறந்ததாக விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு மாதங்களான இந்த சிங்கக் குட்டிகள் தினமும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படும். பொதுமக்களும் இவற்றைச் சென்று பார்வையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த இரண்டு குட்டிகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டாகவும் உள்ளன. பார்வையாளர்கள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் அவற்றை அவதானிக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பெயர் பரிந்துரைக்கும் நிகழ்வு அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகி இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |