குவாசி நீதிபதி மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்! வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு
கல்முனை மருதமடு குவாசி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை செப்டம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
ஐந்து பிள்ளைகளுக்கான மாதாந்திர பராமரிப்பு செலவை செலுத்தி வந்த ஒருவரிடமிருந்து “சேவை கட்டணமாக” ரூ.2,300 இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களான குவாசி நீதிபதி பாலில் மௌலானா மற்றும் அவரது மனைவி சமையால் வேவனம் என்பவர்களுக்கே குறித்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் தெரியவந்த விடயம்
முறைப்பாட்டாளர் தனது ஐந்து பிள்ளைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு செலுத்தி வந்துள்ள நிலையில், அந்தக் கொடுப்பனவுகளின் போது, சந்தேக நபரான குவாசி நீதிபதி ரூ. 2,300 சேவை கட்டணமாக கோரியதாகவும் லஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
அத்தோடு, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி சேவை கட்டணம் நீதிபதியின் மனைவியால் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து இரகசிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சந்தேகநபர் தம்பதியரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

