ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதி வழங்கத் தவறிவிட்டது! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருதப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வழங்கத் தவறியது துன்பகரமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே அளித்த எதிர்பார்ப்புகளை சிதைந்து விட்டன என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றாத போது அழுத்தம் கொடுக்க அவர் செயல்படுத்தும் கருப்பு ஞாயிறு என்ற போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிப்போம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஈஸ்டர் தாக்குதலை அதிகாரத்தை பெறுவதற்காக பயன்படுத்துவது மாத்திரமல்லாது ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.