மனிதாபிமானி வேடந்தரித்துள்ள ராஜபக்சர்கள்! ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

Mullaitivu Iran Thurairajah Raviharan
By Independent Writer Mar 09, 2026 07:32 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: Thavaseelan

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்திய கிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழினப்படுகொலையாளர்கள் தற்போது மனிதாபிமானி வேடந்தரித்து தமது உலகமகா நடிப்புத்திறன்களை வெளிப்படுத்திவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (08) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மனிதாபிமானி வேடந்தரித்துள்ள ராஜபக்சர்கள்! ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு | Rajapaksas Posing As Humanitarians

“வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ளது.

பத்தாவது வருடம் ஆரம்பிக்கின்றது. தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைக்கேட்டு அவர்களின் போராட்டம் தொடர்கின்றது.

அவ்வாறு தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டும், வயது முதிர்வினாலும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத்தேடிவரும் எஞ்சியுள்ளபெற்றோரும், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏனைய உறவினர்களும் தமது தொடர்பேராட்டத்தின் பத்தாவது வருடத்தின் தொடக்கநாளில் பாரிய ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: உலக நாடுகளுக்கு IMF கடும் எச்சரிக்கை

உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: உலக நாடுகளுக்கு IMF கடும் எச்சரிக்கை

வட்டுவாகல் பாலம்

அந்தவகையில் இறுதிக்கட்ட வட்டுவாகல் பாலத்தின் தொடக்கப்புள்ளியிலிருந்து ஆரம்பித்து வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இறுதிக்கட்ட போரின்போது வட்டுவாகல் பகுதியில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்ததாகக்கூறப்படும் இடம்வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

மனிதாபிமானி வேடந்தரித்துள்ள ராஜபக்சர்கள்! ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு | Rajapaksas Posing As Humanitarians

வட்டுவாகல் பாலம் என்பது தமிழ் இனப்படுகொலையின் நினைவுச்சின்னமாகும். எனவேதான் அந்தப்பாலத்தின் தொடக்கப்புள்ளியிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்ததுடன், தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடம்வரையில் மேற்கொண்டனர்.

குறிப்பாக கொளுத்தும் வெய்யிலிலும் வயது முதிர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பெருமளவானவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் பெண்கள், சிறார்களும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றனர். இத்தகைய அவலநிலைகளை தாங்கி கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த உறவுகள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்” என்றார்.  

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025