பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டும் ஏன் தனிச் சலுகை? தமிழக எம்.பி விடாப்பிடி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பவர்கள் ராஜீவ் காந்தியுடன் சேர்த்து 16 பேர் கொலை செய்யப்பட்டவர்களது, குடும்பத்தினர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
25 வருடங்கள் ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யலாம் என்று சட்டம் இருந்தால் அதனை செயற்படுத்த எந்த ஆட்சேபனையும் இல்லை. தமிழகத்தில் 25 வருடமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்கள் பலபேர் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டினால் அது ஏற்றுக்கொள்ள கூடியது.
ஆனால் பேரறிவாளன் போன்றவர்களுக்கு மட்டும் விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல என அவர் எமது ஊடகத்தின் பிரத்தியேக செவ்வியொன்றில் தெரிவித்தார்.
இதன் போது ராஜிவ் காந்தி உட்பட 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள 7 பேருக்கு மாத்திரம் ஏன் தனியான சலுகை வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.