சஜித்துக்கு சவாலான ரணில் - எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் விரைவில் மாற்றம்
இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக் கொண்டமை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் சவாலாக அமையுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே விரைவில் எதிர்க்கட்சி பதவியிலும் மாற்றம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்ததாவது,
நல்லாட்சி அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக ஜனநாயக ரீதியில் புறக்கணித்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி மக்களாணைக்கு புறம்பாக செயற்பட்டதை இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பெறுபேற்றின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது. ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடு தழுவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது. பொதுத்தேர்தல் இடம்பெற்று 10 மாதங்களுக்கு பிறகு அந்த ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சிறந்த அரசியல்வாதி. அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்கும் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் கொண்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.
லு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றி கொள்ளமுடியும்.
அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுகிறது.
பல்வேறு கொள்கையினை கொண்ட கட்சிகள் ஒன்றினைந்து அரசாங்கத்தை அமைக்கும் போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. இக்கருத்து முரண்பாடு அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றார்.