கொதிநிலையில் தென்னிலங்கை அரசியல்! ரணிலின் உதவியை நாடும் ராஜபக்சக்கள்
பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ இருவரும் இணைந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவை இன்று மாலை சந்திக்கபோவதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொது தேர்தல் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி உருவாகி வரும் வேளையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால அரசியல் ஏற்பாடுகள்
அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது, நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்கள் குறித்தும் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மொட்டுக்கட்சியின் உறுப்பினர்களில் பலர் ரணிலின் ஆதரவாளர்களாக இருப்பதனால் தற்போது கட்சிக்கும் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதோடு கட்சி இரண்டாக பிளவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |