நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: வௌியானது காரணம்

Negombo Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Jaso Jul 07, 2026 01:40 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக் கொண்டு மரக்கதவு அருகில் வரை வந்திருந்ததாகவும், மரக்கதவையும் உடைத்து அவர்கள் வெளியேறியிருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் என்ற காரணத்தாலேயே படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இன்று (07) விளக்கமளித்துள்ளார். 

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வந்த கைதிகள், அங்கிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்கியுள்ளதாகவும், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கைதிகள் தப்பியோடுவதைத் தடுப்பதற்கும் எடுக்கக்கூடிய ஒரேயொரு வழிமுறையாகவே பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பேரழிவு ஏற்பட்டிருக்கும்

"சிறைச்சாலை வளாக அமைப்பின்படி பிரதானமாக இரண்டு கதவுகள் உள்ளன. முதலாவதாக இரும்புக்கதவும், அதற்கு அடுத்ததாக மரக்கதவும் இருக்கும். இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவை நோக்கி வந்திருந்தனர். இந்த மரக்கதவுக்கும் இரும்புக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பெறுமதிமிக்க உபகரணங்கள் உள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: வௌியானது காரணம் | Reason Firing In The Negombo Prison Incident

இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்து, இந்த மரக்கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை என்னால் மதிப்பிட முடியாது. எனவே, இந்த நேரத்தில் சிறை அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். சிறை அதிகாரிகள் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கலாம். 

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் : உயிரிழந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் : உயிரிழந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

துப்பாக்கிசூடு நடத்துவதற்கான காரணம்

அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்திருந்த ஒரு சூழலில், அவர்கள் இரும்புக்கதவை உடைத்து மரக்கதவு அருகில் வரை வந்துவிட்டனர். அந்த நேரத்தில் எங்களது சிறை அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையானோர் உள்ளே கைதிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: வௌியானது காரணம் | Reason Firing In The Negombo Prison Incident

 கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் சென்றிருந்தனர். ஆனால், அந்த அதிகாரிகளும் உள்ளே சிக்கிக்கொண்டனர். அந்த நேரத்தில் தான் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் அந்த மரக்கதவூடாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்." என்றார்.

முன்கூட்டியே அறியப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலை குறித்த புலனாய்வுத் தகவல்!

முன்கூட்டியே அறியப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலை குறித்த புலனாய்வுத் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


 

ReeCha
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026