தொடரும் சீரற்ற காலநிலை: மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் (National Building Research Organisation) தெரிவித்துள்ளது.
களுத்துறை (Kalutara) மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு (colombo), காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology ) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழையுடனான வானிலையினால் 360 குடும்பங்களைச் சேர்ந்த 1404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடர்முகாமைத்துவ நிலையம்
களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலி நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |