காலங்களை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள் : அரசிடம் சிறிதரன் கோரிக்கை

Sri Lanka Army Tamils Jaffna S. Sritharan Protest
By Theepan May 29, 2026 12:37 PM GMT
Report

  காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரியுள்ளார்

மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம்(29) வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு கோரி நடைபெற்ற கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

36 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்கள் 

யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலி. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் , யுத்தம் முடிவடைந்து , 17 வருடங்கள் கடந்த நிலையிலும் சொந்த மண்ணில் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. தற்போதும் அந்த மக்கள் , தமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் , வாடகை வீடுகளிலும் தங்கி வாழ்கின்றனர்

காலங்களை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள் : அரசிடம் சிறிதரன் கோரிக்கை | Release The Lands Without Delay Sritharan

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் காணிகளை விடுவிப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம்  இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை

மயிலிட்டியில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரி கறுப்பு கொடி போராட்டம்

மயிலிட்டியில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரி கறுப்பு கொடி போராட்டம்

 மக்களின் காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவம்

மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடாத்தி வருகின்றனர். தோட்டங்களில் விவசாயம் செய்து மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை.

காலங்களை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள் : அரசிடம் சிறிதரன் கோரிக்கை | Release The Lands Without Delay Sritharan

17 வருடங்களாக யுத்தங்கள் இல்லாத போதிலும் மக்கள் இன்னமும் தெருக்களில் வாழ்கின்றார்கள். இந்த அரசாங்கமும் , முன்னைய அராஜக அரசாங்கம் போன்றே செயற்படுகின்றது.

மக்களின் கோரிக்கைகள் நியாயமானது. சர்வதேச அமைப்புக்கள் . மனித உரிமை செயற்பாட்டளர்கள் என இங்கே நேரில் வந்து இந்த காணிகளை பார்வையிட்டால் தெரியும். இங்கு இராணுவ முகாம்களுக்காக காணிகளை கையகப்படுத்தவில்லை என

இந்த மக்கள் தமது சொந்த காணிகளில் விவசாயம் செய்து அவர்கள் தமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு தனியார் காணிகளில் இராணுவ வைத்தியசாலையை கட்டி , தனியார் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்கிறது. இந்த காணிகளை உடனடியாக விடுவியுங்கள்

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

காணிகளை விடுவிக்க தொடர் அழுத்தம்

எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் , விடுவிக்கப்பட வேண்டிய காணிகளையும் , இன்னமும் மீள் குடியேற்றப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பில் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்.

காலங்களை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள் : அரசிடம் சிறிதரன் கோரிக்கை | Release The Lands Without Delay Sritharan

அதன் அடிப்படையில் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய தொடர் அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம்

மக்களின் நியாமான கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்து , மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காலங்களை இழுத்தடிக்கும் வார்த்தைகளை தவிர்த்து , மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026