பயணத்தடை தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Shavendra Silva
SriLanka
Army Commander
Traveling Ban
By Chanakyan
தற்போது நடைமுறையிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படும்.
அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.