இது சரியான நேரம் இல்லை! பேரழிவு உண்டாகும் - முன்னாள் பிரதமர் எச்சரிக்கை
இந்த நேரத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி அரசாங்கம் நினைக்கவே கூடாது. அத்தகைய சதி பேரழிவிற்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால், அரசாங்கம் அதிகாரம் குறித்த யோசனையை இன்னும் 10 ஆண்டுகளுக்கு கைவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
அண்மையில் நடந்த கலந்துரையாடலில் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நானயக்கார மற்றும் ரஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழுவுக்கு ரணில் விக்ரமசிங்க இதைக் கூறியுள்ளார் மேலும் இதன்போது எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் சேரவும், கூட்டணியின் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணிலுக்கு முன்மொழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலளித்த அவர், தனியாக முடிவெடுக்க முடியாததால், இந்த திட்டத்தை கட்சிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.