லஞ்ச ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dilakshan
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (26) லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஷ மீதான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யவே ரொஷான் ரணசிங்க அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சஷீந்திரவின் கைது
அரச சொத்துக்களை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சஷீந்திர ராஜபக்ச விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குறித்த விவகாரம் தொடர்பாக சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் கடந்த ஒக்டொபர் மாதம் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி