சஜித் முதிர்ச்சியற்றவர் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடும் தாக்கு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்(Sajith Premadasa) திறமையின்மை மற்றும் அவரது முதிர்ச்சியற்ற தன்மையை கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் தாம் கண்டதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando)தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,
''எதிர்க்கட்சித் தலைவரின் திறமையின்மையால் எதிர்க்கட்சி பிளவுபட்டுள்ளது. அதனால் தான் அவர் மழையில் நனைவது போன்று நாடகமாடினார்.
சஜித் பிரேமதாச விவசாயிகளுக்காக அன்றி எதிர்க்கட்சித் தலைமையை காப்பாற்றவே முயற்சிக்கிறார்.
இந்த நாட்டில் மக்கள் இறப்பதைப் பார்க்க ஆசைப்படும் ஒரு எதிர்க்கட்சித்
தலைவர் தான் அவர், இந்த நாடகங்களை வெறும் திரைப்படக் காட்சிகளாகத்தான் நாம் பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.