டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள இலங்கை வீடுகள்!

Dollar to Sri Lankan Rupee Government Of Sri Lanka Dollars
By Dharu Dec 03, 2022 11:28 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கடன் மீளப்பெறுவது மிகவும் குறைந்துள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களால் மீளப்பெற்ற சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து மாவட்ட முகாமையாளர்களையும் கண்டிக்கு வரவழைத்து, மாதாந்தம் 300 மில்லியன் ரூபா கடன் தொகையை வசூலிக்கும் திட்டம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

300 மில்லியன் வருமானம்

டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள இலங்கை வீடுகள்! | Scheme To Sell Houses For Dollar Srilanka Rajeev

அந்த செயலமர்வுக்கு பிறகு கடனை மீளப் பெறலை படிப்படியாக வளர்த்துக்கொள்ள முடியும். நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பார்க்கும்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வருமான வளர்ச்சியானது பெரும் சாதனையாகும்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது இம்மாதமும் 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்க்கின்றது.அடுத்த வருடமும் இதே போன்று வருமான நிலைமையை பேணுவதற்கு தேவையான திட்டங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே தயாரித்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவினங்களுக்காக கிட்டத்தட்ட 150 மில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது. எனினும் தற்போதைய வருமானத்தின் படி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திறைசேரிக்கு சுமையின்றி இயங்கக்கூடியதாக உள்ளது.

வீடுகளை டொலர்களுக்கு விற்பனை

டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள இலங்கை வீடுகள்! | Scheme To Sell Houses For Dollar Srilanka Rajeev

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 3750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு கிட்டத்தட்ட 2750 மில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளது.

அத்துடன் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக எதிர்காலத்தில் வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.”என குறிப்பிட்டார். 

ReeCha
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி