ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கான காரணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து வசதி
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சிறந்த திட்டமிடமிடலுடன் புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆகவே தோற்றம் பெறும் சவால்களுக்கு தீர்வு காண அரசியலுக்கு அப்பாற்பட்டு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்வி உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசுரிய கோரிக்கை விடுத்துள்ளார்
புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகும் வகையில் பாடசாலை நேரம் நீடிக்கப்படுகின்றது.
இதன் மூலம், மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் ஆசிரியர்கள் அவர்களை மதிப்பீடு செய்வதற்கும் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை நேரம் நீடிக்கப்படும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 31 நிமிடங்கள் முன்