அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டி (Seat Belt) அணிவதைக் கட்டாயமாக்கி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி, தங்களது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
இலங்கை மோட்டார் வாகன சங்கத்தின் (Automobile Association of Ceylon) தலைவர் தம்மிக்க ஆடிகல இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற பெரும்பாலான வீதி விபத்துக்கள் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்கு, பயணிகள் ஆசனப் பட்டி அணியாமல் பயணித்தமையே பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசனப் பட்டிகள்
ஆசனப் பட்டிகளை அணிந்து வாகனங்களைச் செலுத்துவது ஒரு தேசியத் தேவை (National Need) எனக் கருதப்பட வேண்டும் என்று தம்மிக்க ஆடிகல வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களைத் தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசனப் பட்டிகளை அணிவதன் முக்கியத்துவத்தை ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காகத் தீவு தழுவிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தை இலங்கை மோட்டார் வாகன சங்கம் முன்னெடுக்கவுள்ளது.
இந்தநிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசனப் பட்டியின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்புத் துண்டுப் பிரசுரங்கள் (Leaflets) அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுச் சீட்டு வழங்கும் சாவடிகளில் (Ticket Counters) வைத்து விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |