தரவு பாதுகாப்பு மனுவிலுள்ள பாரதூரமான சிக்கல்கள் தீர்க்கப்படாத வரை நிறைவேற்றப்படக்கூடாது!

Media SriLanka Transparency International Sri Lanka Nadishani Perera
By Chanakyan Mar 08, 2022 07:04 AM GMT
Report

தரவு பாதுகாப்பு மனுவின் பாரதூரமான சிக்கல்கள் தீர்க்கப்படாத வரை மனு நிறைவேற்றப்பட கூடாது என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 

• 2022 மார்ச் மாதம் 9ஆம் திகதி - தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மனு மீதான இரண்டாவது வாசிப்பு இடம்பெறவுள்ளது

• தற்போதைய ஏற்பாடுகளுடன் காணப்படும் மனு மீதான முக்கிய மூன்று பாரதூரமான சிக்கல்கள்

• குறித்த பாரதூரமான சிக்கல்கள் அடையாளம் கண்டு தீர்வு காணும் வரை சட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரப்பட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு 2022 மார்ச் மாதம் 9ஆம் திகதி, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மனு மீதான இரண்டாவது வாசிப்பு இடம்பெறவுள்ளது. செய்முறைப்படுத்துனர் அல்லது கட்டுப்பாட்டாளர்களிடம் உள்ள தரவுகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல் என்பது இந்த மனுவில் நோக்கமாகும்.

எவ்வாறாயினும், இம்மசோதாவானது தற்போது இருக்கும் வடிவிலேயே சட்டமாக்கப்பட்டால், சில உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான தாக்கங்கள் உட்பட மேலும் முக்கிய மூன்று பகுதிகள் குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா (TISL) நிறுவனம் தனது ஆழமான கரிசனையினை வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக தகவல்கள் மக்களால் பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கும் ஒரு கருவியாக மாறிவரும் இன்றைய சூழலில் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்ட கட்டமைப்பை உருவாக்குதல் என்பது மனித உரிமைகளை பாதுகாப்பதில் ஓர் முக்கிய அடைவாகும். இருப்பினும், இந்த மனு

1. ஊடகத்துறை மீதான தாக்கம்

இம்மனுவானது தரவு செய்முறைப்படுத்தலில் "ஊடகவியலாளர்களின் நோக்கத்திற்காக" அல்லது ஊடக சுதந்திரத்தினை பயன்படுத்துதல், கருத்துச் சுதந்திரம் போன்ற விடயங்களை அங்கீகரிக்கவில்லை. அதாவது, ஒலிபரப்பு ஊடகம் உள்ளிட்ட ஊடகங்கள், தங்களது ஊடக நடவடிக்கைகளுக்காக பிறரின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதில் இம்மனுவானது தரவுக் கட்டுப்பாட்டாளராகவும் செய்முறைப்படுத்துனராகவும் மாறுவதனால், ஊடக அறிக்கையிடலின் போது தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதிலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆகவே ஊடக அறிக்கையிடலின் நோக்கங்களுக்காக தகவல்களை அணுகுவததையும் வெளியிடுவதையும் தேவையற்ற வகையில் கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யும் அடிப்படையில் சட்டரீதியான நிபந்தனையாக "ஊடகவியலாளர்களின் நோக்கத்திற்காக" எனும் பகுதி அடையாளம் காணப்பட வேண்டும். 

2. தரவு பாதுகாப்பு அதிகார சபையானது பரந்த அதிகாரங்களை கொண்டதும் சுயாதீனமற்றதும் ஆகும்

இந்த மனுவானது தரவு பாதுகாப்பு அதிகார சபையினை ஓர் 'அரச கட்டுப்பாட்டு' அமைப்பாகவே சித்தரிக்கிறது. அரசியல் ரீதியான தலையீடு அல்லது அதன் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளுக்கு எதிரான போதுமான அதிகாரம் குறித்த அதிகார சபைக்கு இல்லை.

மேலும், தரவு பாதுகாப்பு அதிகார சபையானது சுயாதீனமற்ற மற்றும் நீதித் துறைசாரா அமைப்பாக இருந்த போதிலும் தரவுகளை பெறுவதற்கான மூலகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மற்றும் அதிகார சபையின் உத்தரவுகளுக்கு இணங்கத் தவறும் தரவு கட்டுப்பாட்டாளர்களுக்கும் தரவு செய்முறைப்படுத்துனர்களுக்கும் 10 மில்லியன் ரூபா வரை தண்டனை விதிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது பொதுவாக மக்களின் உரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், ஊடகங்கள் மற்றும் ஊடகவியலார்களின் மூலகங்கள்/ ஆதாரங்கள் தொடர்பிலான தகவல்களை அதிகார சபை கோரவும் இது வழிவகுக்கும். எனவே குறித்த சட்டத்தின் நோக்கங்களுக்காக ஓர் சுயாதீன தரவு பாதுகாப்பு அதிகார சபை அமையப்பெற வேண்டும். 

3. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மீதான தாக்கம்

மனுவில் தற்போதைய ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஏதேனும் முரண்பாடுகளின் போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட வேறு எழுதப்பட்ட சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மேலாக குறித்த மனுவின் ஏற்பாடுகள் மேலோங்கி காணப்படும். குறிப்பாக நடைமுறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை வலுவிழக்க வழிவகுக்கும். ஆகவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான முரண்பாடுகளை தவிர்க்க ஓர் திட்டவட்டமான விதிவிலக்கைச் சேர்க்க வேண்டும். 

முன்னதாக 2022 மற்றும் 2021 இல், TISL நிறுவனமானது தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சு சார் ஆலோசனைக் குழு மற்றும் அனைத்து (225) நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இந்த கரிசனையினை எழுப்பியது. 2019 ஆம் ஆண்டு வரையப்பட்ட தனிப்பட்ட தரவு பாதுகாப்பு கட்டமைப்பின் வரைபானது தற்போதைய மனுவை மேம்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய விடயங்களை கொண்டுள்ளது.

தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்போடு பொதுநலன் சமநிலைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டின் கட்டமைப்பின் முன்னுரையானது குறிப்பாக இலங்கையின் அரசியலமைப்பானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை ஓர் முக்கியமான உரிமையாக குறிப்பிடுகிறது.

2019 ஆம் ஆண்டின் வரைபு மசோதாவை நடைமுறைப்படுத்தும் அரச கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு மூன்று உறுப்பினர்களை நியமிக்க பொது விண்ணப்ப படிமுறை ஊடாக அழைப்பு விடுத்தது. இந்த நடவடிக்கையானது அதிகார சபை சுயமாக இயங்குவதை உறுதி செய்யும் முக்கிய விடயமாகும்.

சிறந்த பொது நலனுக்காக தற்போது நடைமுறையிலுள்ள உரிமைகள் மற்றும் ஏற்பாடுகளுடன் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தை இணக்கமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்பதனால் TISL நிறுவனமானது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றிடம் குறித்த கரிசனைகள் முறையாக அடையாளப்படுத்தப்பட்டு தீர்க்கப்படும் வரை இச்சட்டத்தை இயற்ற அவசரப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா குறிப்பிடுகையில்,

"தற்போதைய வடிவில் குறித்த மனுவானது இயற்றப்படுமானால் தரவு பாதுகாப்பு சட்டமூலம் ஆனது இன்னும் துஷ்பிரயோகம் அல்லது தவறாக பயன்படுத்த கூடிய ஓர் சட்ட மூலமாக மாறக்கூடும்.

இந்த மனுவானது ஊடகங்கள் மற்றும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்கள் (Whistleblowers) மத்தியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படலாம், மேலும் இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு பேரிடியாகவும் அமையும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024