காவல்துறை உயர் அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் பலருக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, இடமாற்றங்களை வழங்க காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளரான (SSP) ஷானி அபேசேகரா, பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தென் மாகாண பிரதி காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய கித்சிறி ஜயலத், சபரகமுவ மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றம்
பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சிப் பிரிவுகளின் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் கே.பி. கருணாநாயக்க, விசேட பாதுகாப்புப் பணியில் இருந்து வட மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வட மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் எச்.பி. சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |