எதிர்காலத்தில் எந்த பொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்
Bandula Gunawardena
shortage
material
in future
By Jaso
உலகம் முழுவதும் தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் எதிர்காலத்தில் எந்த வகையான பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று சொல்ல முடியாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது ஓரளவு மட்டுமே செயற்படும் சீனா போன்ற நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் உள்ளூர் கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இது உலகின் சமீபத்திய சவால், என்றார்.
உலக எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தெரிந்த யாராவது இலங்கையில் இருந்தால், அவர்களை தன்னிடம் அனுப்புமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி