டீசல் தாங்கிக்குள் பெட்ரோல் இறக்கப்பட்டதால் பெரும் இழப்பு: ஆரம்பமான விசாணை
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொலன்னறுவை - ஹிங்குராங்கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டீசல் சேமிக்கும் நிலத்தடி தாங்கிக்குள் பெட்ரோல் இறக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இன்று (28) காலை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வருகை தந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, டீசல் தாங்கிக்குள் தவறுதலாக இறக்கப்பட்ட பெட்ரோல் தொகையை மீண்டும் அதே எரிபொருள் பவுசரில் ஏற்றி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குக் கொண்டு சென்று பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
பிரதேச சபையைப் பிரதிநிதி
எவ்வாறாயினும், ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் டீசல் நிலத்தடி தாங்கிக்குள் இறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஹிங்குராங்கொட கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் மற்றும் உரிய முறையில் செயல்படத் தவறியமை காரணமாகவே இந்தப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், குறித்த கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளராக ஹிங்குராங்கொட பிரதேச சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |