டைட்டன் நீர்மூழ்கி விபத்து - 2006 ஆம் ஆண்டே வெளியான கணிப்பு
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் 2006ஆம் ஆண்டு “த சிம்ப்ஸன்ஸ் தொடர்” கணித்திருப்பதான காணொளி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
“த சிம்ப்ஸன்ஸ்” தொடர், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆவது குறித்தும், ரஷ்ய - உக்ரைன் போர், கொரோனா வைரஸ் ஆகியவை குறித்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்த நிலையில், டைட்டன் விபத்துக் குறித்த காணொளியும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
'த சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன்
The Simpsons really predicted the titanic submarine situation .. and that they would completely run out of oxygen (watch till the end) this is actually scary. pic.twitter.com/xOWtE6DTQq
— Qura (@Qurandale) June 22, 2023
111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.
டைட்டனில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது.
அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாட்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.
நேற்று (22) மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது.
இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது.
சாகச சுற்றுலா
? Breaking News
— WOLF™️ (@thepakwolf) June 22, 2023
All five people onboard on #Submersible are all very sadly died, #OceanGate confirms. This video shows how the accident happened with the submarine. ?#Titanic #Titan pic.twitter.com/W82X9OawuD
ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இதற்காக ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பைலர் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
இந்தப் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.2 கோடி (இந்திய மதிப்பு) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் பயணத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 கோடீஸ்வரர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணத்தை தொடங்கிய டைட்டன் 1.45 மணி நேரத்தில் நீர்மூழ்கியுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டானது.
நீண்ட தேடுதல் பணிக்குப் பிறகு, 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து இருக்கலாம் என்று ஓசன்கேட் நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் பிரபலமான ‘த சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடரில் காட்டப்பட்டிருப்பதாக ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆச்சரயமூட்டும் இன்னொரு விஷயம்
இந்தக் காணொளி 2006ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘த சிம்ப்ஸன்ஸ்’ தொடரின் 17ஆவது சீசனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் 10ஆவது எபிசோடில் பல ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கிய 'Piso Mojado' என்ற கப்பலில் இருக்கும் பொக்கிஷங்களை எடுப்பதற்காக நாயகன் ஹோமர் சிம்ப்ஸன் தனது தந்தையுடன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கிறார்.
பவளப் பாறை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் நீர்மூழ்கிக் கப்பலில் ஆக்ஸிஜன் குறைந்து ஹோமர் அதில் மாட்டிக் கொள்வது போல காட்டப்பட்டுள்ளது.
ஆச்சர்யமூட்டும் இன்னொரு விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானில் இருந்து இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட ஷாஜதா தாவூத் மற்றும் மகன் சுலேமான் தாவூத் இருவரும் தந்தையும் மகனும் ஆவர்.
நெட்டிசன்கள் இந்த விபத்தை ‘சிம்ப்ஸன்ஸ்’ தொடருடன் ஒப்பிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.