நாட்டின் நீதித்துறைக்குச் சாவு மணி : சிறீதரன் கடும் கண்டனம்

Sri Lankan Tamils Tamils Parliament of Sri Lanka S. Sritharan Sarath Weerasekara
By Dilakshan Oct 04, 2023 03:58 PM GMT
Report

இந்த நாட்டில் நீதி எங்குள்ளது? நாட்டின் நீதித்துறைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் மக்களை முடக்கவே அரசு முயற்சிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தொடர்ந்து சுயாதீனமாகச் செயற்பட முடியாது என்பதை நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிங்களப் பேரினவாதக் கொள்கையில் இருந்து விடுபட்டு அரச தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத்தீர்வு வழங்குவார்கள் என்பது கானல் நீராகவே காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், 2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் இராணுவ வாகனத்தின் ஊடாகக் கொலை செய்யும் முயற்சி எடுக்கப்பட்டது.


2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வலுக்கட்டாயமான முறையில் பதவிநீக்கப்பட்டார். இந்த நாட்டில் நீதி இல்லை என்பதற்குப் பல விடயங்கள் சான்று பகர்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுக்கும், கொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு நிறுவனத் தொண்டர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. வழங்கிய கட்டளையை மீளப்பெறுமாறு சட்டமா அதிபர் விடுத்த அழுத்தத்தால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நாட்டில் தொடர்ந்து சுயாதீனமாகச் செயற்பட முடியாது என்பதை நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். சிங்களப் பேரினவாதக் கொள்கையில் இருந்து விடுபட்டு அரச தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத்தீர்வு வழங்குவார்கள் என்பது கானல் நீராகவே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு நீதி கோரி கிளிநொச்சி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்கள்.

குருந்தூர் மலையில் உள்ள சிவன் ஆலயத்தை இடித்தழித்து அங்கு பௌத்த விகாரை கட்டும்போது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்தபோது பௌத்த பேரினவாதக் கொள்கையுடையவர்கள்,பௌத்த பிக்குகளை ஒன்றுதிரட்டி படைபட்டாளத்துடன் ஒன்றிணைந்து குருந்தூர்மலையில் பௌத்த விகாரையைக் கட்டி முடித்துள்ளார்கள்.

அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய திட்டம் : நாடாளுமன்றில் அறிவித்தார் ரணில்

அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய திட்டம் : நாடாளுமன்றில் அறிவித்தார் ரணில்


சரத் வீரசேகரவின் பேரினவாதக் கருத்து

இது நீதிமன்றத்தை அலட்சியப்படுத்தும் செயற்பாடாகும். திருகோணமலையில் அரிசிமலைப்பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையைப் புறக்கணித்துப் பலவந்தமான முறையில் பௌத்த விகாரை கட்டப்படுகின்றது.

நாட்டின் நீதித்துறைக்குச் சாவு மணி : சிறீதரன் கடும் கண்டனம் | Sivagnanam Shritharan Attending Parliament Session

இந்த நாட்டில் நீதி எங்குள்ளது? நாட்டின் நீதித்துறைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் மக்களை முடக்கவே அரசு முயற்சிக்கின்றது.

எவ்வகையான அடக்குமுறையைக் கொண்டு வரலாம் என்றே அரச தலைவர்கள் சிந்திக்கின்றார்கள்.இந்த நாடு முன்னேற்றமடைவதற்கு எந்தச் சாத்தியமும் கிடையாது. முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை விவகாரம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதால் நீதிபதி சரவணராஜா பாரிய நெருக்கடிக்கு உள்ளானார். தமிழ் நீதிபதி நீதி வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பேரினவாதக் கருத்தை வெளியிட்டார்.

இலங்கையில் நீதித்துறை இறந்துள்ளது. இந்த நாட்டிலா இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கப் போகின்றது. இதனால்தான் நாங்கள் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம்.

தீர்வுத் திட்டங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட அறிக்கைகள்,திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சகல இனங்களையும் ஒன்றிணைத்து இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்குச் சர்வதேச விசாரணை ஊடாகத் தீர்வு கோருகின்றோம்”  என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலிற்கு தீர்வளிக்க தீர்மானம்: பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் அறிவிப்பு

ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலிற்கு தீர்வளிக்க தீர்மானம்: பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் அறிவிப்பு


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025