திருகோணமலையில் மாணவர்களுக்கு எமனாக மாறிய இழுவைப்படகு! வெளியாகியது உயிரிழந்தவர்களின் விபரம் (காணொளி)
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்களுடன் பயணம் செய்த இழுவைப்படகு கவிழ்ந்ததில் அறுவர் பேர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவத்தை அடுத்து சிறிலங்கா கடற்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து மீட்புப் பணிகளைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது - மூன்றரை சிறுமி மற்றும் 4 மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்திருந்தனர். தொடர்ந்துதம் முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது 14 பேர் மீட்கப்பட்டு கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களின் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் எமது பிரந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
குறித்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட் அறுவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் விபரங்களைய கிண்ணியா தள வைத்தியசாலை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
சகு சஹீ (வயது - மூன்றரை ) சஹிலா (வயது - 6) பரீஸ் பகி (வயது - 6) ஷேஹப்துல் சாகர் எவ். சரீன் (வயது-8) மற்றும் சப்ரியா (வயது - 30) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இழுவைப்படகொன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த இழுவைப் படகில் சுமார் 20 மாணவர்கள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பயணம் செய்த மாணவர்களில் ஏழு பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன், காணாமல் போன மாணவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு கிண்ணியா - குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கியுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் எனப் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காப்பற்றப்பட்டவர்கள் நோயாளர் காவு வண்டி மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுள்ளனர். மேலும் இவ்விபத்தில் பலர் உயிரிழந்திருக்ககூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.
எனினும், சரியான மரண விபரம் இன்னும் தெரியவராத நிலையில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022