ஆயுதப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை

Sri Lanka Army Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Government Sri Lanka Air Force
By Sathangani Feb 14, 2024 05:28 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

சிறிலங்காவில் ஆயுதப் படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இந்த வருட இறுதிக்குள் சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கையை 135,000 ஆக குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 150,000 ஆக இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ள 2100 கிராம உத்தியோகத்தர்கள்

புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ள 2100 கிராம உத்தியோகத்தர்கள்

இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்படும்

இதேவேளை இராணுவத்தின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப்படும் என கடந்த ஆண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் இராணுவப் படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை | Sl Govt Steps To Reduce The Number Of Tri Forces

நிதிக் கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு படைத்தரப்பினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் தொழில்நுட்ப ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் சமநிலையான பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிக உயரமான மலை! மீண்டும் மக்கள் பார்வைக்காக

இலங்கையின் மிக உயரமான மலை! மீண்டும் மக்கள் பார்வைக்காக

விமானப்படையினருக்கான ஆட்சேர்ப்பு 

அத்துடன் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கை 35000 ஆக குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் இராணுவப் படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை | Sl Govt Steps To Reduce The Number Of Tri Forces

புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் இராணுவத்தின் எண்ணிக்கை 35000இனால் குறைவடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமானப்படையினருக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடற்படைக்கு பதிய ஆட்சேர்ப்பு

இதேவேளை, கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஓய்வு பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவோரின் எண்ணிக்கையிலும் வித்தியாசம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை | Sl Govt Steps To Reduce The Number Of Tri Forces

இதனால் தொடர்ச்சியாக கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெறும் போது படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

எனினும் படையினரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு ஏனைய நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு

இரண்டாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016