பந்து வீச்சில் சிம்பாப்வே அணியை கதி கலங்க வைத்த இலங்கை அணி
புதிய இணைப்பு
3 போட்டிகள் கொண்ட இலங்கை-சிம்பாப்வே 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்து வீச்சில் திறமையை காட்டிய இலங்கை அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க 04 ஓவர்களில் 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் மஹிஷ தீக்சன ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இப்போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 83 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்றைய போட்டி இடம்பெறுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
தீர்மானமிக்க போட்டி
ஆரம்பப் போட்டியில் இலங்கை 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது.அடுத்த போட்டியில் சிம்பாப்வே4 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.
இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியுடன் 1:1 என்ற புள்ளிகளுடன் சமனிலையில் உள்ளதால் இன்றைய இறுதிப்போட்டி தீர்மானமிக்க போட்டியாக உள்ளது.
இலங்கை அணி
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க (தலைவர்), மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க
சிம்பாப்வே அணி
க்ரெய்க் ஏர்வின், ப்றயன் பெனெட், சிக்கந்தர் ராஸா (தலைவர்), சோன் வில்லியம்ஸ், ரெயான் பேர்ல், லூக் ஜொங்வே, க்ளைவ் மதண்டே, வெலிங்டன் மஸகட்ஸா, ப்ளெசிங் முஸராபனி, ரிச்சர்ட் ங்கராவா.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |