மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்
                                    
                    SLPP
                
                                                
                    Sagara Kariyawasam
                
                                                
                    Sri Lanka Presidential Election 2024
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை (29) எட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம் (Sagara Kariyawasam) இதனை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரசியல் சபைக் கூட்டம்
இதேவேளை பொதுஜன பெரமுனவின், அரசியல் சபைக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்