திருகோணமலையில் தொடருந்தில் மோதி பலியான இராணுவ வீரர்!
திருகோணமலையில் தொடருந்து விபத்தில் சிக்கி இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் - வென்ராசன்புர பகுதியில் நேற்று (04) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த 40 வயதுடைய ஐ.ஆர். அசங்க என்ற நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கந்தளாய் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்தவர்
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (04) இரவு குறித்த நபர், தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் குற்றப் புலனாய்வு துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |