பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட நிகழ்ச்சி!!
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
SL Protest
By Kanna
இலங்கையின் தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வது எவ்வாறு என்ற தொனிப்பொருளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட நிகழ்வொன்று இன்று பொருளாதார நிபுணர் கலாநிதி ஸ்வர்னிம் வாக்லே தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மூலோபாய விசேட நிபுணராக இவர் 36 நாடுகளுடன் பணியாற்றி வருகிறார். மேலும் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளராக ஸ்வர்னிம் வாக்லே பணியாற்றியுள்ளார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக மற்றும் நாடாளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







4ம் ஆண்டு நினைவஞ்சலி