நாடு முழுவதும் களமிறங்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படை!
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் 'நீர்நிலைகளில் விசேட சுற்றிவளைப்பு ' எனும் பெயரில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் விசேட அதிரடிப்படையில் 'நீர்நிலைகளில் விசேட சுற்றிவளைப்பு ' எனும் பெயரில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன் போது விசேட அதிரடிப்படையில் இணைந்து செயற்பட்டு வரும் 16 உத்தியோகத்தர்கள் இதற்காக தெரிவுக் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சில வாரங்களாக பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விசேட சுற்றிவளைப்பு பிரிவினர், நீர் நிலைகளில் இடம்பெறும் குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள உள்ளனர். அதற்கமைய, சட்டவிரோத மானிக்கக்கல் அகழ்வுகள், மதுபான உற்பத்திகள் உள்ளிட்ட சுற்றிவளைப்புகளுக்காக இவர்களின் உதவியை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு படகுகளை செலுத்துவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான நிறுவனத்தின் ஒத்துழைப்பும் , இலங்கை மோட்டார் படகுகள் சங்கத்திடமும் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
