ஈரான் போர் எதிரொலி: அமெரிக்காவில் இழுத்து மூடப்பட்ட விமான நிறுவனம்
ஈரான் போர் இரண்டு மாதமாக நீடித்து வரும் நிலையில் விமான எரிபொருள் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனைச் சமாளிக்க முடியாமல் பல விமான நிறுவனங்கள் தடுமாறுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மே 2-ம் திகதியுடன்(இன்று) தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கானோருக்கு பறிபோன வேலை
ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடப்படுவதால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்பிரிட் நிறுவனத்தைக் காப்பாற்ற ஜனாதிபதி ட்ரம்ப் 500 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க முன்மொழிந்தார். ஆனால் அவருடைய ஆலோசகர்கள், குடியரசுக் கட்சியினரின் கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை.
ஈரான் போரால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட முதல் விமான நிறுவனம் இதுவாகும். அமெரிக்காவின் மலிவுக் கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |