காட்டிக்கொடுத்த மைத்திரி - எதிர் முறைப்பாட்டுடன் அத்துரலிய!

Colombo Athuraliye Rathana Thero Maithripala Sirisena Sri Lanka Crime Branch Criminal Investigation Department
By Kalaimathy Jun 23, 2022 10:47 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியமை சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேன, அண்மையில் வெளியிட்டிருந்த தகவலுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு எதிராக முறைப்பாடு

காட்டிக்கொடுத்த மைத்திரி - எதிர் முறைப்பாட்டுடன் அத்துரலிய! | Sri Lanka Colombo Murder Maithiribala Athuraliya

அண்மையில் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைத்திரிபால சிறிசேன, றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குமாறு, அத்துரலியே ரத்ன தேரர் கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்த பின்னர்,  ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜூட் மாந்த ஜயமஹா என்ற நபரை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலையை அடிப்படையாக கொண்டு இயங்கும் விசேட நிபுணர்கள் குழுவே உத்தரவிட்டது.

விடுதலைக்கு யார் காரணம்

காட்டிக்கொடுத்த மைத்திரி - எதிர் முறைப்பாட்டுடன் அத்துரலிய! | Sri Lanka Colombo Murder Maithiribala Athuraliya

அந்த குழுவில் முன்னாள் நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனநல மருத்துவ நிபுணர்கள் உட்பட முக்கியமானவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களே விடுதலை செய்யக் கூடிய நபர்கள் குறித்த விசாரணைகளை நடத்துவார்கள். அவர்களே விடுதலை செய்யுமாறும் பரிந்துரைத்தனர்.

ஜெயமஹா என்ற நபருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து, சில வருடங்கள் சென்ற பின்னர், அவரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு விசேட நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது எனக் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016