அரசின் மூடநம்பிக்கையே இத்தகு நிலைக்கு காரணம் - வெளிப்படையாக கூறிய முஜிபுர் ரஹ்மான்

covid mujibur rahman sgb sri lanka
By Vanan May 04, 2021 11:36 PM GMT
Report

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்தமைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

பிசிஆர் பரிசோதனைகளை குறைக்குமாறு அரசாங்க தரப்பு தம்மிடம் வேண்டியதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வெளிப்படையாகவே கூறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா பரவல் இல்லை என்ற தோற்றப்பாட்டில் தான் அரசாங்கத்தின் தலைவர் முதல் சிறிய தலைவர்கள் வரை நடந்து கொள்கின்றனர்.

ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எத்தகைய சுகாதார நடைமுறைகளுக்கும் பாரியளவில் முக்கியத்துவம் கொடுக்காது கலந்து கொண்டு வந்தார்.

சுகாதார தரப்பு அறிவிக்கும் சுகாதார ஒழுங்குகள் சாதாரண மக்களுக்கு மாத்திரம் தான் என்ற வண்ணம் அரசாங்க தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.

திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் சாதாரண மக்கள் பங்கேற்றால் இராணுவத்தினரை பயன்படுத்தி அடக்கு முறையைப் பிரயோகிக்கின்றனர்.

ஒரு சட்டம் இரு விதமாக செயற்படுத்தப்படுகிறது. இது நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடும் செயற்பாடாகும்.

கொரோனா ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து விஞ்ஞானபூர்வ முடிவுகள் நடைமுறைகள் குறித்து கவனத்திற் கொள்ளாது மூட நம்பிக்கைகளின் பக்கம் சென்றனர். பல பாணிகளின் பக்கம் சென்றனர். விஞ்ஞான நடைமுறைகளை புறக்கணித்தனர். இன்றைய நிலைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகள் தான் காரணம் என்றார்.    

ReeCha
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020