தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடம்
Mahinda Amaraweera
Sri Lanka
Ministry of Agriculture
By Sathangani
உலகில் தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
தெங்கு பயிற்சி நிலையத்தில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சர் பணிப்புரை
எனவே, தேங்காய் நுகர்வுக்கான பாவனையில் ஏற்படும் விரயத்தை குறைப்பது தொடர்பான புதிய தொழில்நுட்ப அறிவை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை நாட்டில் அண்மைக்காலமாக வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ளமையால் தென்னைப் பயிர்ச்செய்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்