100 ரூபாவுக்காக படுகொலை செய்யப்பட்ட பெண்!

Sri Lanka Police Attempted Murder Sri Lanka Sri Lanka Police Investigation
By Kalaimathy Jun 03, 2022 05:59 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

இரத்தினபுரி, ஹெலபாத்த மஹிராகல பிரதேசத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட 27 வயதான பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொலை சம்பவம் தொடர்பாக கேஹெல்ஹோவிட்டகம பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடையவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெண் படுகொலை

100 ரூபாவுக்காக படுகொலை செய்யப்பட்ட பெண்! | Sri Lanka Murder Police Arrest Investigation

ஹெலபாத்த பிரதேசத்தில் வேலை செய்து வந்த பெண், பணி முடிந்து  வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் ஒரே இடத்தில் தொழில் செய்து வந்துள்ளதுடன் சம்பவம் நடந்த தினத்தில் கணவன் வேலைக்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்குச் சென்ற மனைவி வீடு திரும்பாததால், அவரைத் தேடிய கணவன், வீட்டுக்கு அருகில் மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி இருப்பதை கண்டு, அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். 

எனினும் பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் கொலை

100 ரூபாவுக்காக படுகொலை செய்யப்பட்ட பெண்! | Sri Lanka Murder Police Arrest Investigation

சம்பவம் நடந்த தினம் பிற்பகல் பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் நின்று கொண்டிருந்த சந்தேக நபர், பெண்ணிடம் 100 ரூபாய் பணத்தை கேட்டுள்ளார்.

பணத்தை கொடுக்க மறுத்ததால் சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணின் உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

காவல்துறையால் கைது

100 ரூபாவுக்காக படுகொலை செய்யப்பட்ட பெண்! | Sri Lanka Murder Police Arrest Investigation

பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, அவரிடம் இருந்த பையை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் மதுபானத்திற்கு அடிமையானவர் எனவும் மதுபானத்தை அருந்த பெண்ணிடம் பணத்தை கேட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் காவல்துறையினர்  மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023