சீதாவை "மேடம்" என்று அழைக்கவில்லை! உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தமித விக்ரமசிங்க
திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவை “மேடம்” என்று அழைக்காத காரணத்தினால் குறித்த அமைச்சின் தலைவர் பதவியிலிருந்த தமித விக்ரமசிங்க நீக்கப்பட்டுள்ளார்.
அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தலைவர் தன்னைத் தாண்டி செயல்படுகிறார். அவர் எனக்கு சரியான மரியாதை அளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து அவர் தொழிற்பயிற்சி ஆணையத்திலிருந்து நீக்கப்பட்டு தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.