பெண் ஒருவர் தொடர்பில் பொதுமக்களிடம் பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ள காவல்துறை!
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற வன்முறைகளின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான பெண் ஒருவரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி திவுலபிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே பெண் ஒருவர் சம்மந்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தோன்றிய பெண் அலுவலகத்தைத் தாக்கி தீவைக்க முன்வந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 071 859 4949 அல்லது 071 419 66 09 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறை தலைமையகம் அனைத்து பொதுமக்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
