ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு - மூன்றாம் தரப்பு தேவையற்றது!
இலங்கை இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என சிறிலங்கா அதிபரின் சர்தேச காலநிலை ஆலோசகர்எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையற்றது
மேலும் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை எனவும் எரிக் ஹொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் சிறிலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதில் பிரதான வகிபாகம் ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
