இலங்கை இந்தியாவின் பிராந்தியம்! வலுக்கும் கண்டனம்
இலங்கையானது இந்தியாவின் பிராந்தியம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்த நோக்கில் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அந்தக் கருத்தை வெளியிட்டார் என தெரியவில்லை. அது பற்றி நான் முழுமையாக ஆராயவில்லை. எனினும், இலங்கை என்பது இந்தியாவின் பிராந்தியம் கிடையாது.
இந்திய விரோதப் போக்கு
அதேபோல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்திய விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் கட்சி அல்ல. பொருளாதாரம் சார்ந்த விடயங்களின் போது ஒத்துழைத்துச் செயற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி' என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
இந்தநிலையில், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி' என ஹரின் பெர்னாண்டோ கூறியிருப்பது தீவிரமான அறிக்கை எனவும் இது தேச துரோக குற்றமெனவும் சில இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் கட்சி தலைவர்கள் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |