மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார சுமை - போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி திருகோணமலையில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த சிறு வலைகள் மற்றும் தூண்டில்கள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுவோர் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கையின் பொருளாதார சுமை நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைக்கின்றது. இந்த நிலையிலேயே தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய மீனவப் பெண்கள் சம்மேளனம் ஆகியன குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு உடனடித் தீர்வு
இதன் போது, திருகோணமலையினை சேர்ந்த மீனவக் குடும்பங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கையில் காணப்படும் பொருளாதாரச் சுமை, எரிபொருள் விலையேற்றம், மின் மற்றும் நீர்ப்பட்டியல்களின் விலையேற்றம் ஆகியவற்றிற்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பேரணி
இதன்போது கையெழுத்திடப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவ சமூகத்தினரால் கையளிக்கப்பட்டது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/966ec665-2e32-4d9a-9588-8eb0f7bb9460/23-64071ef590caa.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)