தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ள இலங்கையின் பாதாள உலகக் குழுத்தலைவர் - தமிழ்நாட்டு உளவுத்துறை எடுத்துள்ள நடவடிக்கை!
இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழுத்தலைவர் இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானி இம்ரான்) எனப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் இந்தியாவின் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தகவலை இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி இந்தியா ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேடுவதற்கான முயற்சி
கஞ்சிபானி இம்ரான் கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டின் இராமேஸ்வாரத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுழைந்துள்ள இம்ரான் மற்றும் அவரது நண்பர்களை தேடுவதற்கான முயற்சிகளை எடுக்குமாறு தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான்
கொலை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத குற்றங்களை செய்த இம்ரான், இலங்கை காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டநிலையில், அந்தநாட்டு அரசு அவரை இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது.
இந்தநிலையில், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், தற்போது தலைமன்னார் வழியாக இந்தியாவின் தமிழ்நாட்டிக்குள் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது.