தேர்தலை தடுக்க 22 விதமான கூட்டுச் சதி - பகிரங்கப்படுத்திய சஜித்
தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டுச் சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,
தேர்தல் ஒத்திவைப்பு
இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
ஆனாலும்,தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க கடுமையாக முயற்சித்து வருகிறது.
அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசாங்கத்தின் கடைசி முயற்சியாகத் தெரிகிறது.
இது ஜனநாயகத்தின் நசுக்கும் விடயமாகும். ஜனநாயகத்தை பாதுகாக்க உடனடியாக தேர்தலை நடத்துங்கள் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பல கேள்விகளையும் முன்வைத்தார்.
