காசாவில் சிக்கிய இலங்கையர்கள்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட தூதரகம்
காசாவில் சிக்கியுள்ளவர்களில் 11 இலங்கையர்கள் ரஃபா எல்லையின் ஊடாக எகிப்தை அடைந்துள்ளதாக பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதரக அதிகாரி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தில் உள்ள இலங்கையின் பிரதிநிதி அலுவலகம் இந்த குழுவை நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் 17 இலங்கையர்கள்
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் காசா விட்டு வெளியேறுவதற்காக ரஃபா எல்லைக் கடவு இரண்டாவது நாளாகத் தொடர்ந்து திறக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நேற்று காசாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆரம்பத்தில் 17 இலங்கையர்கள் காசாவை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.
எகிப்தில் உள்ள விடுதி
எவ்வாறாயினும், 11 இலங்கையர்கள் மாத்திரமே ரஃபா எல்லைக் கடவையைப் பயன்படுத்தி எகிப்துக்குள் நுழைய முடிந்தது.
அவர்கள் தற்போது எகிப்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.