பலஸ்தீனர்களிடம் கைப்பற்றிய நிலங்களில் பணிபுரிய இலங்கையர்கள் : மேலும் மோதலுக்கு வழிவகுக்குமென எச்சரிக்கை
பாலஸ்தீனர்களிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியுள்ள காணிகளில் இலங்கையர்கள் விவசாய வேலைகளுக்கு கூலிகளாக அமர்த்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அது அந்த இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனர்களின் பண்ணைகளை பராமரிக்க
பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட சொத்துக்களில் உள்ள பண்ணைகளை பராமரிக்க நமது தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி
இது இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி. மறுபுறம் இந்தப் பண்ணைகளில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் இன்று வாழ வழியில்லை. இதன் மூலம் மேலும் மோதல்களை உருவாக்க முயற்சிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் இஸ்ரேலில் பணியாற்ற பத்தாயிரம் இலங்கையர்கள் அனுப்பப்டவுள்ளதாக தகவல் வெளியானமை குறிப்பிடத்தக்கது.