கொரோனா தடுப்பூசிகளை இலங்கையில் உற்பத்தி செய்ய பேச்சு
srilanka
vaccine
russia
china
product
By Jaso
கொரோனா தடுப்பூசிகளை இலங்கையில் உற்பத்தி செய்யும் பணியைத் தொடங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவக் கழகத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஸ்புட்னிக் தடுப்பூசி மற்றும் சீனாவின் சினோபாம் தடுப்பூசிகளை நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பில் இரண்டு நாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை அரசாங்க மருத்துவ நிறுவனங்களுக்கு வழங்கி இலங்கையில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்