விடுதலைப்புலிகளைச் சேர்ந்த 13 கைதிகளுக்கு கொரோனா
சிறைகளில் உள்ள விடுதலைப்புலிகளை சேர்ந்த 13 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் ஆங்கில இணையத்தளமொன்றுக்கு கருத்து தெரிவித்த சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப்புலிகளைச் சேர்ந்த 13 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களாவர். இதேவேளை தற்போது 901 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தவார தொடக்கத்தில் சிறைச்சாலையில் 3500 இற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 2600 இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.