இலங்கை அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி! சிறீதரன் குற்றச்சாட்டு
Kilinochchi
M A Sumanthiran
Iranaitivu
By Vasanth
கொவிட் தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய கிளிநொச்சி - இரணைதீவு தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் குற்றம்சாட்டிள்ளார்.
இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரன், ஜெனிவா பிரேரணையை செயலிழக்க செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஆகவே அரசாங்கத்தின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழர்களும் முஸ்லிம்களும் நிதானமாக கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.